5 ஏக்கரில் நுண்ணீர் பாசனம் அமைக்கவிவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியம்
பள்ளிப்பாளையம்'பள்ளிப்பாளையம் வட்டாரத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு, ஐந்து ஏக்கர் வரை நுண்ணீர் பாசனம் அமைக்க, 100 சதவீதம் மானியம் வழங்கப்படும்' என, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் செந்தில்வடிவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:பள்ளிப்பாளையம் வட்டாரத்தில் நடப்பாண்டில், சிறு, குறு விவசாயிகளுக்கு, ஐந்து ஏக்கர் வரை நுண்ணீர் பாசனம் அமைக்க, 100 சதவீதம் மானியமும்; பெரு விவசாயிகளுக்கு, 75 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் மூலம் நுண்ணீர் பாசனம் அமைத்துக்கொள்ளலாம். இதில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். சொட்டுநீர் பாசனம் அமைக்க, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், சிட்டா, அடங்கல், நில வரைபடம், குடும்ப அட்டை நகல், மண், நீர் ஆய்வு அறிக்கை, ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், சிறு, குறு விவசாயி சான்றிதழ் ஆகிய ஆவணங்களை, பள்ளிப்பாளையம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் வழங்கி முன்பதிவு செய்து பயன்பெறலாம்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.