உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வாய்க்கால் பாசனம் மூலம் 10,000 ஏக்கரில் நெல் சாகுபடி

வாய்க்கால் பாசனம் மூலம் 10,000 ஏக்கரில் நெல் சாகுபடி

வாய்க்கால் பாசனம் மூலம்10,000 ஏக்கரில் நெல் சாகுபடிபள்ளிப்பாளையம், அக். 16-பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரத்தில், மேட்டூர் கிழக்குகரை வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் வரும்போது, மோளகவுண்டம்பாளையம், எலந்தகுட்டை, சின்னார்பாளையம், தெற்குபாளையம், களியனுார், சமயசங்கிலி, எளையாம்பாளையம், ஆலாம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நெல் சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபடுவர். கடந்த, இரண்டு மாதமாக மேட்டூர் கிழக்குகரை வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் வருகிறது. இந்த தண்ணீரை பயன்படுத்தி பள்ளிப்பாளையம் சுற்று வட்டார விவசாயிகள் நெல் சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.இதுகுறித்து, பள்ளிப்பாளையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயமணி கூறுகையில், ''மேட்டூர் கிழக்குகரை வாய்க்கால் தண்ணீரை பயன்படுத்தி, 10,000 ஏக்கரில் நெல் சாகுபடி பணிகள் நடந்து வருகிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை