தெற்கு அரசு ஆண்கள் பள்ளியில் 134ம் ஆண்டு விழா கொண்டாட்டம்
நாமக்கல்: நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்-பள்ளியில், 134ம் ஆண்டு விழா கொண்டாடப்பட்-டது. தலைமையாசிரியர் சீனிவாசராகவன் தலைமை வகித்தார். உதவி தலைமையாசிரியர் ராமு வரவேற்றார். பி.டி.ஏ., தலைவர் நாகரத்-தினம், முதுநிலை பொருளியல் ஆசிரியர் ஜெக-தீசன், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கமலா, கிருஷ்ண லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவை முன்னிட்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும், அரையாண்டு தேர்வில், முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்கள், 100 சதவீதம் பள்ளிக்கு வருகை தந்த மாணவர்கள் ஆகியோருக்கும் பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்-டது. முடிவில், மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. பள்ளி மேலாண் குழு தலைவர் புவ-னேஸ்வரி, துணைத்தலைவர் ஸ்ரீவித்யா, ஆசிரி-யர்கள், மாணவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.