13ல் நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம்: மா.செ., அழைப்பு
13ல் நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க.,செயற்குழு கூட்டம்: மா.செ., அழைப்புதிருச்செங்கோடு, அக். 10--நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் மதுராசெந்தில் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம், வரும், 13 காலை, 10:00 மணிக்கு, திருச்செங்கோடு - பரமத்தி வேலுார் சாலையில் உள்ள, மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடக்கிறது. மாவட்ட அவைத்தலைவர் நடனசபாபதி தலைமை வகிக்கிறார். இதில், நாமக்கல், பொம்மைக்குட்டைமேட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கவும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும், முடிவடைந்த திட்டங்களை திறந்து வைக்கவும் முதல்வர் ஸ்டாலின் வருகை தர உள்ளார். அவருக்கு, சிறப்பான வரவேற்பளிப்பது; ஒன்றிய, நகர, பேரூர் சார்பு அணி நிர்வாகிகள் பட்டியலை தலைமைக்கு சமர்பிப்பது; தி.மு.க., தலைவர் அறிவுறுத்தல்படி, பரமத்திவேலுார், திருச்செங்கோடு, குமாரபாளையம் தொகுதிகளுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தொகுதி மேற்பார்வையாளர்கள் அறிமுகப்படுத்துதல் மற்றும் கட்சி பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், பொறுப்பாளர்கள், சார்பு அணி தலைவர்கள், அமைப்பாளர்கள், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர், துணை தலைவர், நகர்மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள், துணை தலைவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.