மேலும் செய்திகள்
தடுப்பணையை சீரமைக்காததால் தண்ணீர் வீணாகும் அவலம்
25-May-2025
பள்ளிப்பாளையம்: காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், ஓடப்பள்ளி தடுப்பணையில் மின் உற்பத்தி தீவிரமாக நடந்து வருகிறது.பள்ளிப்பாளையம் அடுத்த ஓடப்பள்ளி பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை உள்ளது. ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும்போது, முழு கொள்ளளவான ஒன்பது மீட்டர் உயரத்துக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு, மின் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆற்றில் தண்ணீர் வரத்து அடிப்படையில் மின் உற்பத்தி ஏற்ற, இறக்கத்துடன் காணப்படும். கடந்த, 12ல், மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால், காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், ஓடப்பள்ளி தடுப்பணையில் மின் உற்பத்திக்கு தேவையான முழு கொள்ளளவு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. அதில் மின் உற்பத்தி தீவிரமாக நடந்து வருகிறது.இதுகுறித்து ஓடப்பள்ளி தடுப்பணை பணியாளர் கூறுகையில், ''ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், தற்போது, 14 மெகவாட் மின் உற்பத்தி நடக்கிறது,'' என்றார்.
25-May-2025