மேலும் செய்திகள்
1.75 டன் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
06-Apr-2025
1.6 டன் ரேஷன் அரிசிகடத்திய 2 பேர் கைதுவெண்ணந்துார்:வெண்ணந்துார் அருகே, மதியம்பட்டி பகுதியில் ரேஷன் அரிசி கடத்துவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் எஸ்.ஐ., ஆறுமுகநயினார் தலைமையில், வெண்ணந்துார் போலிசார் மற்றும் பறக்கும்படை ஆர்.ஐ., முருகேசன் ஆகியோர், மதியம்பட்டி ஏரிக்கரையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த, 'டாடா சுமோ' காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், 1,610 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டியை சேர்ந்த கந்தசாமி மகன் கோபால், 44, செல்லதுரை மகன் கோகுல்ராஜ், 24, என்பதும்; ஆட்டையாம்பட்டி பகுதியில் மக்களிடம் குறைந்த விலைக்கு வாங்கி, தொட்டியப்பட்டியில் உள்ள தனியார் கோழிப்பண்ணைகளில் அதிக விலைக்கு விற்பனை செய்ய கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, கோபால், கோவிந்தராஜ் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்திய கார், ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
06-Apr-2025