உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 19 மினி பஸ் இயக்க ஆணை

19 மினி பஸ் இயக்க ஆணை

19 மினி பஸ் இயக்க ஆணைநாமக்கல்:புதிய அரசாணைப்படி, பொதுமக்களின் நலன் கருதி அதிக குடும்பங்களை கொண்ட கிராமங்கள், குக்கிராமங்கள், குடியிருப்புகளில் உள்ள பொதுமக்களுக்கு, பஸ் வசதி இணைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்து வெளியிடப்பட்டது. இத்திட்டப்படி, நாமக்கல் மாவட்டத்தில், மினி பஸ்களுக்கான வழித்தடம் கண்டறியப்பட்டு, முதல் கட்டமாக, 45 வழித்தடங்கள், இரண்டாம் கட்டமாக, 10 வழித்தடங்கள், என மொத்தம், 55 வழித்தடங்கள் மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டது.அதில், 14 புதிய வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்குவதற்கான அனுமதி ஆணைகள், ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. அதை தொடர்ந்து, கலெக்டர் அலுவலகத்தில், 19 புதிய வழித்தடங்களில், மினி பஸ்கள் இயக்குவதற்கான ஆணையை, கலெக்டர் உமா, மினி பஸ் உரிமையாளர்களுக்கு வழங்கினார். இதுவரை, மொத்தம், 33 வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்குவதற்கான அனுமதி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகேசன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள், அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை