6 வயது சிறுமிக்கு தொந்தரவு வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
நாமக்கல்:நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த தாண்டாகவுண்டம்பாளையம், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் அசோக்குமார், 28; கூலித்தொழிலாளி. இவர், 2020 ஜன.,யில் அதே பகுதியை சேர்ந்த, ஆறு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து, சிறுமியின் பெற்றோர், மங்களபுரம் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தனர். போலீசார், அசோக்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு நாமக்கல் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது.விசாரணை முடிந்து, மகிளா நீதிமன்ற நீதிபதி முனுசாமி, நேற்று தீர்ப்பளித்தார். அதில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அசோக்குமாருக்கு, 20 ஆண்டு சிறை, 1,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து, அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.