உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ராசிபுரம் பகுதி கடைகளில் 260 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்

ராசிபுரம் பகுதி கடைகளில் 260 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்

ராசிபுரம் பகுதி கடைகளில்260 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்ராசிபுரம், நவ. 17-நாமக்கல் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் அதிகளவு பயன்படுத்துவதாக புகார் எழுந்தது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் உமா உத்தரவுப்படி, ராசிபுரம் நகராட்சியில், சேர்மன் கவிதா, கமிஷனர் கணேசன் ஆகியோர் தலைமையில், கடைவீதி, சின்ன கடைவீதி, பட்டணம் ரோடு, புதுப்பாளையம் ரோடு, பூக்கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களில் ஊழியர்கள் சோதனை நடத்தினர்.அங்கு தடை செய்யப்பட்ட கேரி பேக்குகள், தட்டுகள், பிளாஸ்டிக் கப்புகள் இருப்பதை கண்டுபிடித்தனர். இதில், 260 கிலோ கேரி பேக்குகள் பறிமுதல் செய்ததுடன், 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. துப்புரவு அலுவலர் செல்வராஜ், துப்புரவு ஆய்வாளர் கோவிந்தராஜன் மற்றும் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை