உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கர்நாடகாவிலிருந்து வந்த 2,600 டன் மக்காச்சோளம்

கர்நாடகாவிலிருந்து வந்த 2,600 டன் மக்காச்சோளம்

நாமக்கல் நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு, கோழி தீவனமான மக்காச்சோளம், கடலை, எள், புண்ணாக்கு, சோயா, அரிசி, கோதுமை போன்ற மூலப்பொருட்கள், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, ராஜஸ்தான், குஜராத், மஹாராஷ்டிரா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து தருவிக்கப்படுகிறது.அவற்றை, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குடோனிலும் இருப்பு வைக்கப்பட்டு வருகிறது.அதன்படி, கர்நாடகா மாநிலம், பீச்சாப்பூரில் இருந்து, கோழி தீவனமான, 42 டன் மக்காச்சோளம், 42 வேகன்களில் சரக்கு ரயில் மூலம், நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு நேற்று வந்தது. அவற்றை, 110 லாரிகளில் ஏற்றி, மாவட்டம் முழுவதும் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி