உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாமக்கல்லில் ரோந்தில் ஈடுபட்ட போலீசை தாக்கிய 3 பேர் கைது

நாமக்கல்லில் ரோந்தில் ஈடுபட்ட போலீசை தாக்கிய 3 பேர் கைது

நாமக்கல்:நாமக்கல்லில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ., மற்றும் ஏட்டுவை, 'குடி'போதையில் தாக்கிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., செட்டியண்ணன், 56; ஏட்டு ராஜ்மோகன். இருவரும் நேற்று முன்தினம் இரவு ரோந்தில் ஈடுபட்டிருந்தனர். நாமக்கல்-துறையூர் சாலை கொசவம்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியை தணிக்கை செய்ய சென்றனர். அங்கு சாலை நடுவில் டூ - வீலர் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த இடத்தில் நான்கு பேர் இருந்தனர். 'நடுவழியில் வண்டியை ஏன் நிறுத்தியுள்ளீர்கள்' என எஸ்.ஐ., செட்டியண்ணன் கேட்டுள்ளார். அதில் இருவர், 'நாங்கள் போதையில் இருக்கிறோம்; வழக்கு போட்டு விடுவீர்களா' என கேட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களில் ஒருவர் அலைபேசியில் பதிவு செய்துள்ளார். இதைப்பார்த்த ஏட்டு ராஜ்மோகன், அலை பேசியை பறிக்க முயன்றதில் வாக்குவாதம் ஏற் பட்டது. மூன்று பேர் சேர்ந்து எஸ்.ஐ., மற்றும் ஏட்டுவை சரமாரியாக தாக்கியுள்ளனர். ஒருவர் எஸ்.ஐ.,யை கத்தியால் குத்த முயன்றுள்ளார். இதுகுறித்து புகார்படி, என்.கொசவம்பட்டி விஜய், 25, அஜித்குமார், 24, ஞானசேகரன், 32, ஆகியோரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை