உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாமக்கல்லில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது

நாமக்கல்லில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது

நாமக்கல், நேற்று முன்தினம் இரவு மூன்று பேர், நாமக்கல்லில் இருந்து பஸ்சில் எருமப்பட்டிக்கு கஞ்சா கடத்தி செல்வதாக மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பொன்னேரி கைக்காட்டி பஸ் நிறுத்தம் அருகே, இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன், எஸ்.ஐ., செல்லத்துரை மற்றும் மதுவிலக்கு போலீசார் தயார் நிலையில் இருந்தனர்.இவர்கள் சந்தேகப்படும்படியாக பஸ்சில் இருந்து இறங்கி வந்த மூவரை பிடித்து விசாரணை செய்தனர். அதில், அவர்கள் எருமப்பட்டியை சேர்ந்த முகமது அப்துல் ரகுமான், 25, பூவரசன், 19, விருதுநகரை சேர்ந்த முகமது அப்சர்கான், 25 என்பது தெரியவந்தது. அவர்கள் வைத்திருந்த பையில் இருந்து, 5 கிலோ 690 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.தொடர்ந்து அவர்கள் மூன்று பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட முகமது அப்துல் ரகுமான் மீது கஞ்சா உள்பட 9 வழக்குகள் நிலுவையில் இருந்து வருவதும், இவர் ஒடிசாவில் இருந்து ரயில் மூலம் கஞ்சாவை கடத்தி வந்து, எருமப்பட்டி பகுதியில் சப்ளை செய்து வருவதும் தெரியவந்து உள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ