மேலும் செய்திகள்
புகையிலை பொருட்கள் பறிமுதல்
04-Oct-2024
ப.வேலுார், நவ. 2--ஜேடர்பாளையம், ஈஸ்வரன் கோவில் பகுதியில் உள்ள கடைகளில் குட்கா பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, ஜேடர்பாளையம் போலீசார் அப்பகுதியில் உள்ள டீ, பெட்டி கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.இதில், ஜேடர்பாளையம், ஈஸ்வரன் கோவில் அருகே உள்ள ஒரு கடையில் ஆய்வு மேற்கொண்டபோது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, 40 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றை பறிமுதல் செய்தனர்.மேலும், பெட்டிக்கடை உரிமையாளரான, பிலிக்கல்பாளையம் அருகே, கரட்டூர் பகுதியை சேர்ந்த சரவணகுமார், 39, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
04-Oct-2024