உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ப.வேலுாரில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.43,000 திருட்டு

ப.வேலுாரில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.43,000 திருட்டு

ப.வேலுார் : ப.வேலுாரில் உள்ள டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்த மர்மநபர்கள், 43,000 ரூபாயை திருடிச் சென்றனர். இச்சம்பவம், டாஸ்மாக் ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அருகே, பொய்யேரியில் டாஸ்மாக் கடை (எண்: 6152) செயல்பட்டு வருகிறது. சூப்பர்வைசராக, ப.வேலுாரை சேர்ந்த துரைசாமி, 49, செல்வராஜ், 48, விற்பனையாளராக கரிகாலன்குமார், 47, மணி, 48, ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு பணிகளை முடித்து விட்டு, வழக்கம்போல் டாஸ்மாக் கடையை பூட்டி சென்றனர்.நேற்று காலை, 6:00 மணிக்கு அந்த வழியாக சென்றவர்கள், டாஸ்மாக் கடை திறந்து கிடப்பதாக, டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் துரைசாமிக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அவர், இதுகுறித்து, ப.வேலுார் போலீசில் புகாரளித்தார். இன்ஸ்பெக்டர் ரங்கசாமி தலைமையிலான போலீசார் நடத்திய விசாரணையில், கடைக்குள் வைத்திருந்த, 43,000 ரூபாய் மற்றும் மது பாட்டில்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. தொடர்ந்து அங்குள்ள, 'சிசிடிவி' கேமராவில் பதிவான வீடியோ காட்சிகளை வைத்து, மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடடத்தி வருகின்றனர். இச்சம்பவம், டாஸ்மாக் ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்