உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஒரே நாளில் ரூ.5.58 லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை

ஒரே நாளில் ரூ.5.58 லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை

நாமக்கல்: லோக்சபா தேர்தலை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டம் முழுதும், 42 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவினர், ஆவணம் இன்றி, 50,000 ரூபாய்க்கு மேல் எடுத்து செல்லும் ரொக்கம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில், நாமக்கல் சட்டசபை தொகுதிக்குட்பட்ட, புதுச்சத்திரம் அருகே உள்ள பாச்சல் பகுதியில், காலை, 10:45 மணிக்கு, தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் உடுமலைப்பேட்டையை சேர்ந்த ஆட்டு வியாபாரி மேக்சன், 37, என்பவர், எவ்வித ஆவணமும் இன்றி, 96,000 ரூபாய் எடுத்து வந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர், உயர் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அதேபோல், நாமக்கல் பகுதியில், 62,400 ரூபாய், சேந்தமங்கலம் சட்டசபை தொகுதியில், நான்கு லட்சம் ரூபாய் என, நேற்று ஒரே நாளில், 5 லட்சத்து, 58 ஆயிரத்து, 400 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி