மேலும் செய்திகள்
மாவட்ட ஜூடோ போட்டி 150 மாணவியர் பங்கேற்பு
20-Aug-2025
நாமக்கல்:ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி திட்டத்தில், தமிழகத்தில் இருந்து, ஆறு மாணவ, மாணவியர், சர்வதேச அளவில் பிராண்டு துாதர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக கூட்டமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட, நிலையான வளர்ச்சி கவுன்சில் சார்பில், ஐந்தாவது சர்வதேச இளைஞர் மன்ற மாநாடு, தாய்லாந்தின் பாங்காங் நகரில், கடந்த ஆக., 21, 22ல் நடந்தது. இதில், இந்தியா உட்பட, 62 நாடுகளில் இருந்து, பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர். தமிழகத்தில் இருந்து, 8 முதல், பிளஸ் 1 வரை படிக்கும் மாணவ, மாணவியர்களின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் குறித்த அறிவு மற்றும் சிறந்த தகவல் தொடர்பு திறன் கொண்டவர்கள், பள்ளி சார்பில் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்.இந்த மாணவர்கள், தமிழகத்தின் சிறந்த செயல்பாடுகளை, ஒரு நிமிடம் ஓடக்கூடிய வீடியோவாகவும் சமர்ப்பித்தனர். இதில், பள்ளி கல்வித்துறை சார்பில், ஆறு மாணவ, மாணவியர், ஒரு வழிகாட்டி ஆசிரியர் தேர்வு செய்யப்பட்டு, பாங்காங் அழைத்து செல்லப்பட்டனர்.இதில், வேலுாரை சேர்ந்த மாணவி நந்தினி, தஞ்சை தரணிஸ்ரீ, நாமக்கல் யாழினி மற்றும் சேலத்தை சேர்ந்த மாணவர் அஸ்வாக், நாமக்கல் கமலேஷ், செங்கல்பட்டு ராகுல் ஆகியோர், ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி திட்டத்தில், பிராண்டு துாதர்களாக அங்கீகரிக்கப்பட்டு தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
20-Aug-2025