உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 6 வயது சிறுமிக்கு தொல்லை காமுகனுக்கு 20 ஆண்டு

6 வயது சிறுமிக்கு தொல்லை காமுகனுக்கு 20 ஆண்டு

நாமக்கல்:நாமக்கல் மாவட்டம் செல்லப்பம்பட்டி அடுத்த நடுப்பட்டியை சேர்ந்தவர் ரவி, 50. கூலித் தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்த, 6 வயது சிறுமியை, 2021ம் ஆண்டு மார்ச் 5ம் தேதி மிட்டாய் வாங்கித் தருவதாக கூறி, பாலியல் தொல்லை செய்துள்ளார்.சிறுமியின் அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு சிறுமியை மீட்டனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த நல்லிபாளையம் போலீசார், ரவியை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நாமக்கல் நீதிமன்ற நீதிபதி முனுசாமி, இரண்டு வழக்குகளில் 25 ஆண்டு சிறைத் தண்டனை, தலா, 1,000 ரூபாய் அபராதம் விதித்து, தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். அவர் ஒரு வழக்கில் அதிகபட்ச தண்டனையாக வழங்கப்பட்ட 20 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை