| ADDED : மார் 20, 2024 02:09 AM
எருமப்பட்டி:எருமப்பட்டி
பகுதியில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற, 7
கடைகளுக்கு, 'சீல்' வைத்து அபராதம் விதிக்கப்பட்டது.எருமப்பட்டி,
காவக்காரன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், தமிழக அரசால் தடை
செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, உணவு
பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கு புகார் வந்தது. இதையடுத்து,
உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வகுமார் தலைமையில் போலீசார் மற்றும்
வருவாய்த்துறையினர் இணைந்து அப்பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில்
சோதனை நடத்தினர். அப்போது, அங்குள்ள, 7 பெட்டி கடைகளில் மறைத்து
வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது
கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, 7 கடைகளுக்கு, 'சீல்' வைத்து,
தலா, 25,000 ரூபாய் வீதம், 1.75 லட்சம் ரூபாய் அபராதம்
விதிக்கப்பட்டது.