60 ரேஷன் கடைகளில் பறக்கும் படை ஆய்வு விற்பனையாளருக்கு ரூ.10,737 அபராதம் விதிப்பு
60 ரேஷன் கடைகளில் பறக்கும் படை ஆய்வுவிற்பனையாளருக்கு ரூ.10,737 அபராதம் விதிப்புநாமக்கல், செப். 25-ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கொண்ட பறக்கும் படையினர், இருப்பு குறைவாகவும், கூடுதல் இருப்பு வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறி, ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு, 10,737 ரூபாய் அபராதம் விதித்தனர்.நாமக்கல் மாவட்டத்தில், பொது வினியோக திட்டத்தில், 914 ரேஷன் கடைகள் உள்ளன. அதில், கூட்டுறவுத்துறை கட்டுப்பாட்டில், 700க்கும் அதிகமான ரேஷன் கடைகள் உள்ளன. அவற்றில், அத்தியாவசிய பொருட்களான அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில், கோதுமை உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? அவற்றை முறையாக விற்பனை செய்யப்படுகிறதா? இருப்பு சரியான அளவில் உள்ளதா? அல்லது கூடுதலாக வைக்கப்பட்டுள்ளதா?மேலும், மளிகை பொருட்கள் இருப்பு, விற்பனை குறித்தும், மாதந்தோறும், ரேஷன் கடைகளில், கூட்டுறவுத்துறை சார்பில், ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. அப்போது, சரியான அளவு இல்லாமலும், கூடுதலாக இருப்பு இருந்தாலும், சம்பந்தப்பட்ட ரேஷன் கடை விற்பனையாளருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அதற்காக, நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் அருளரசு தலைமையில், கூட்டுறவு சார் பாதிவாளர்களை கொண்டு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பறக்கும் படையினர், திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.அதன்படி, பரமத்தி மற்றும் திருச்செங்கோடு வட்டாரங்களில், இணைப்பதிவாளர் அருளரசு தலைமையிலான பறக்கும் படையினர், 60 ரேஷன் கடைளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, ரேஷன் கடைகளில் உள்ள இருப்பு சரி பார்க்கப்பட்டது. அதில், குறைவாக இருப்பு இருந்ததும், கூடுதலாக இருப்பு வைக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு, 10,737 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.