உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பயன்படுத்தாமல் வீணாகும் சுகாதார வளாகம்

பயன்படுத்தாமல் வீணாகும் சுகாதார வளாகம்

ராசிபுரம்: ராசிபுரம் யூனியன், காக்காவேரி அடுத்த வேலம்பாளையம் கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். வேலம்பாளையத்தில் இருந்து ஒடுவன்குறிச்சி செல்லும் பிரிவு சாலையோரம், பொது சுகாதார வளாகம் அமைக்கப்பட்டு மக்கள் பயன்படுத்தி வந்தனர். சில நாட்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால், கொஞ்சம் கொஞ்சமாக சுகாதார வளாகத்தை பயன்படுத்துவதை தவிர்த்து வந்தனர். தற்போது, இதை பயன்படுத்துவதே இல்லை. இதனால், கட்டடம் கொஞ்சம் கொஞ்சமாக சேதமடைந்து வருகிறது. சுகாதார வளாகத்தை சுற்றியும் கிணறு, ஆழ்துளை கிணறு என பல்வேறு நீராதாரங்கள் உள்ளன. ஆனாலும், இதை சுத்தம் செய்து பயன்பாட்டிற்கு ஏற்றார்போல் சீரமைத்தால் பொதுமக்கள் அனைவருக்கும் வசதியாக இருக்கும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ