உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கொல்லிமலையில் விபத்து வடமாநில வாலிபர் பலி

கொல்லிமலையில் விபத்து வடமாநில வாலிபர் பலி

சேந்தமங்கலம்: உத்தரபிரதேச மாநிலம், காசிபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ரோஷன் சிங், 27; திருச்சி, பொன்ம-லைபட்டி ரயில்வே துறையில் மெக்கானிக். இவர், நண்பர் அபிஷேக்குமார், 28, என்பவருடன், நேற்று முன்தினம் காலை, டூவீலரில் கொல்லிமலைக்கு சுற்றுலா வந்தார். கொல்லிமலையில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்துவிட்டு, மாலை நேரத்தில் கொல்லிமலையில் இருந்து திரும்பி கொண்டிருந்தனர்.செம்மேடு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே, வளைவில் திரும்பும்போது நிலைதடு-மாறி சாலையோரத்தில் விழுந்தனர். இதில், ஹெல்மெட் அணியாததால், ரோஷன் சிங்கிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அபிஷேக் குமார் லேசான காயமடைந்தார். அருகில் இருந்-தவர்கள், இருவரையும் மீட்டு செம்மேடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை செய்தனர். பின், மேல் சிகிச்சைக்கு, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், ரோஷன் சிங் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். அபிஷேக் சிங், சிகிச்சை பெற்று வருகிறார். வாழவந்தி நாடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ