உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சாலை விபத்தில் மாணவி பலி

சாலை விபத்தில் மாணவி பலி

நாமக்கல் : நாமக்கல் அருகே நடந்த சாலை விபத்தில் கல்லுாரி மாணவி பலியானார். திருச்சி மாவட்டம், உறையூரை சேர்ந்த சிவக்குமார் மகள் கனிஷ்கா, 17. கல்லுாரியில் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ளார். இந்நிலையில், நாமக்கல் அடுத்த மரூர்பட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு பண்டிகைக்காக வந்தார். நேற்று காலை டூவீலரில் திருச்சிக்கு கிளம்பினார். சின்ன முதலைப்பட்டி அருகே வந்தார். அப்போது, லாரியை கடக்க முயன்றபோது, நாமக்கல்லில் இருந்து வந்த லாரியில் மோதினார். இதில், பலத்த காயமடைந்த கனிஷ்கா சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து நாமக்கல் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ