மேலும் செய்திகள்
தி.மு.க., பேனர் கிழிப்பு
28-Sep-2025
குமாரபாளையம், குமாரபாளையம் அருகே, பெண் ஒருவர் குறுக்கே நடந்து சென்றதால், டூவீலரில் இருந்து கீழே விழுந்தவர் உயிரிழந்தார். குமாரபாளையம் அருகே எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் வசிப்பவர் நடராஜன், 42. இவர் செப்., 22 மாலை 4:30 மணியளவில், தன் குழந்தைகளை பள்ளியிலிருந்து அழைத்து வர, டி.வி.எஸ். ஸ்டார் சிட்டி பைக்கில் பள்ளிபாளையம் சாலை, சானார்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது பெண் ஒருவர் குறுக்கே நடந்து சென்றதால், நிலைதடுமாறி கீழே விழுந்தார். தலையில் காயமடைந்த இவர், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு அவர் இறந்தார். குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
28-Sep-2025