உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ரியல் எஸ்டேட் புரோக்கரை வெட்ட சென்ற வீடியோ வைரல்

ரியல் எஸ்டேட் புரோக்கரை வெட்ட சென்ற வீடியோ வைரல்

‍புதுச்சத்திரம்: ரியல் எஸ்டேட் புரோக்கரை, 10க்கும் மேற்பட்ட அடியாட்கள், அரிவாள் கொண்டு வெட்ட சென்ற, 'சிசிடிவி' காட்சிகள் வாட்ஸாப்பில் பரவி அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.புதுச்சத்திரம் அடுத்த கல்யாணி அருகே, செம்பாம்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ், 44; ரியல் எஸ்டேட் புரோக்கர். கடந்த, 8 இரவு, 10:30 மணிக்கு, 10க்கும் மேற்பட்ட அடியாட்கள் அரிவாளுடன் சுரேஷ் வீட்டிற்கு சென்று மிரட்டியுள்ளனர். அப்போது, அவர்களின் சத்தம் கேட்டு வெளியே வந்த சுரேஷ், அரிவாள்களுடன் அடியாட்களை நிற்பதை கண்டு அதிர்ச்சியடைந்து, வீட்டிற்குள் சென்று பதுங்கி கொண்டார். வீட்டிற்கு வெளியே நின்றிருந்த சுரேஷின் மனைவியை பார்த்து, 'உன் கணவனை வெட்டாமல் விடமாட்டோம்' என, மிரட்டியுள்ளனர்.தொடர்ந்து, கார் கண்ணாடியை அரிவாளல் உடைத்தும், வீட்டின் உள்ளே கற்களை வீசி சேதப்படுத்தி விட்டும் சென்றனர். இதுகுறித்து, புதுச்சத்திரம் போலீசில், சுரேஷ் புகாரளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து பதிவான, 'சிசிடிவி' காட்சிகள், வாட்ஸாப்பில் பரவி அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை