உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை

நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை

நாமக்கல், நாமக்கல், காவேட்டிப்பட்டியில் உள்ள குறிஞ்சி பள்ளி, 25 ஆண்டுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி, தொடர்ந்து சாதனை மாணவர்களை உருவாக்கி வருகிறது.இதுகுறித்து, பள்ளி தாளாளர் தங்கவேல் கூறியதாவது: கடந்த, 2024--25ம் கல்வியாண்டில் நடந்த பிளஸ் 2 தேர்வில், இப்பள்ளி அறிவியல் பிரிவில் சிறப்பிடம் பிடித்துள்ளது. மாணவர்கள் சக்தி, 600க்கு, 594 மதிப்பெண் பெற்று, இன்ஜி., கட் ஆப்பில், 199.5 மதிப்பெண்ணும்; ஆல்பினஸ் ரூபஸ், 591 மதிப்பெண் பெற்று, இன்ஜி., கட் ஆப்பில், 199.5 மதிப்பெண்ணும், கால்நடை மருத்துவம் மற்றும் அக்ரி கட் ஆப்பில், 199.5 மதிப்பெண்ணும் பெற்றுள்ளனர்.இதேபோல், மாணவன் ஜனா, 574 மதிப்பெண் பெற்று, இன்ஜி., கட் ஆப்பில், 200 மதிப்பெண்ணும்; மாணவன் ஹரிணிஷ், 574 மதிப்பெண் பெற்று, இன்ஜி., கட் ஆப்பில், 198 மதிப்பெண்ணும்; மாணவி நித்திலா, 566 மதிப்பெண் பெற்று, இன்ஜி., கட் ஆப்பில், 198ம், கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் அக்ரி கட் ஆப்பில், 197 மதிப்பெண்ணும்; மாணவன் விஸ்வா கார்த்திக், 560 மதிப்பெண் பெற்று, இன்ஜி., கட் ஆப்பில், 198ம் பெற்று சாதனை படைத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை