உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பா.ஜ., சார்பில் ஆலோசனை பெட்டி

பா.ஜ., சார்பில் ஆலோசனை பெட்டி

நாமகிரிப்பேட்டை: ராசிபுரம் சட்டசபை தொகுதி வாக்காளர்களின் ஆலோசனையை கேட்க, பா.ஜ., சார்பில் முள்ளுக்குறிச்சியில் ஆலோசனை பெட்டி வைக்கப்பட்டது.'வலிமையான பாரதத்திற்கு மோடியின் உத்தரவாதம்' என்ற பெயரில் ஒவ்வொரு தொகுதியிலும் வாக்காளர்களின் ஆலோசனை, கோரிக்கையை, பா.ஜ.,வினர் கேட்டு வருகின்றனர். இதற்காக வைக்கப்பட்டுள்ள பெட்டியில், இப்பகுதி மக்கள் மனுவாக, ஆலோசனையாக எழுதி போடலாம். இதுபோல், ராசிபுரம் தொகுதியில் ஒவ்வொரு கிராமம், டவுன் பஞ்., உள்ளிட்ட பகுதிகளில் ஆலோசனை பெட்டி வைக்கப்பட்டது. நேற்று, முள்ளுக்குறிச்சி பஸ் ஸ்டாண்டில் ஆலோசனை பெட்டி வைக்கப்பட்டது. மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில துணைத்தலைவர் லோகேந்திரன் கலந்து கொண்டார். பொறுப்பாளர் சேகர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்