உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / விவசாய தொழிலாளர் சங்க அமைப்புக்குழு கூட்டம்

விவசாய தொழிலாளர் சங்க அமைப்புக்குழு கூட்டம்

எலச்சிபாளையம் எலச்சிபாளையத்தில் நடந்த தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட அமைப்புக்குழு கூட்டத்திற்கு, நிர்வாகி மணிகண்டன் தலைமை வகித்தார். இதில், எலச்சிபாளையம் யூனியன், கிளாப்பாளையம் கிராமம், மொகாசி அருந்ததியர் தெரு மக்களுக்கு, கடந்த, 13ஆண்டுகளுக்கு முன், இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.இதுவரை வருவாய்த்துறை அதிகாரிகள் வீட்டுமனை நிலத்தை அளந்து அத்துகாட்டாமல் உள்ளனர். இதை கண்டித்து, வரும், 28 காலை, 10:00 மணிக்கு திருச்செங்கோடு, அண்ணாதுரை சிலை முன் மாவட்ட செயலாளர் ஜெயராமன் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட செயலாளர் ஜெயராமன் விளக்கி பேசினார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ