மேலும் செய்திகள்
சிறுமியிடம் சில்மிஷம் ஒடிசா வாலிபர் கைது
23 hour(s) ago
அதிக விலைக்கு மது விற்றவர் கைது
05-Oct-2025
நாமகிரிப்பேட்டை: நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை பகுதியில் மரவள்ளி பயிர் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது. அதில் வெள்ளை ஈ தாக்குதல் பரவலாக உள்ளதால், இதனை கட்டுப்படுத்த நாமகிரிப்பேட்டை வேளாண்துறை யோசனை தெரிவித்துள்ளது.இதுகுறித்து, வெளியிட்ட அறிக்கை:வெள்ளை ஈ பாதிப்பு உள்ள மரவள்ளி செடியில், இலையில் உள்ள சாற்றை உறிஞ்சுவதால் செடி வெளிறிய நிறமாக காணப்படும். இதனால், செடி வளர்ச்சி குறைவதுடன், கிழங்கும் திரண்டு வளராமல் பாதிக்கப்படும். ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பை பின்பற்றுவதன் மூலம், இதை கட்டுப்படுத்தலாம். 'இமிடாகுளோர்' மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு, ஒரு மில்லி மற்றும் 'அசிபேட்' ஒரு லிட்டர் தண்ணீருக்கு, 2 கிராம் என்றளவில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம். அதேபோல், மாவுப்பூச்சிகள் சாற்றை உறிஞ்சி, இலைகளை கருப்பு நிறத்தில் மாற்றிவிடும். இதனை கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் தண்ணீரில், 5 மில்லி மீன் எண்ணெய் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 hour(s) ago
05-Oct-2025