உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தி.மு.க.,வில் இணைந்த அ.தி.மு.க., நிர்வாகிகள்

தி.மு.க.,வில் இணைந்த அ.தி.மு.க., நிர்வாகிகள்

ராசிபுரம், டிச. 2-ராசிபுரம் ஒன்றியம், சந்திரசேகரபுரம் ஊராட்சி அ.தி.மு.க., கிளைச்செயலாளர் காமராஜ் மற்றும் வார்டு உறுப்பினர் சந்திரா ஆகியோர் தலைமையில், அக்கட்சியில் இருந்து விலகி நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான ராஜேஸ்குமார் எம்.பி., முன்னிலையில், தி.மு.க.,வில் இணைந்தனர்.பொருளாளர் பாலசந்தர், ஒன்றிய செயலாளர்கள் ராமசுவாமி, அசோக்குமார், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் சத்யசீலன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கட்சியில் இணைந்த உறுப்பினர்களுக்கு எம்.பி., ராஜேஸ்குமார் சால்வை அணிவித்து வரவேற்றார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை