அங்கன்வாடி மையங்கள் ரூ.10 லட்சத்தில் பராமரிப்பு
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் நகராட்சி பகுதியில், சேதம-டைந்துள்ள அங்கன்வாடி மையங்கள், ரூ.10 லட்-சத்தில் பராமரிப்பு பணிகள் செய்யப்படும் என, நகராட்சி தலைவர் செல்வராஜ் தெரிவித்தார்.பள்ளிப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில், தலைவர் செல்வராஜ் தலைமையில், துணை தலைவர் பாலமுருகன் முன்னிலையில், நக-ராட்சி பகுதியில் பணிபுரியும் அங்கன்வாடி பணி-யாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்-தது. இதில் அங்கன்வாடி பணியாளர்கள், பெரும்பாறைகாடு பகுதியில் புதிதாக அங்கன்-வாடி மையம் அமைக்க வேண்டும், சேதமடைந்த அங்கன்வாடி மையங்களை பராமரிப்பு செய்ய வேண்டும் என, கோரிக்கை வைத்தனர்.இதையேற்ற நகராட்சி தலைவர் செல்வராஜ், முதல் கட்டமாக, 10 லட்சம் ரூபாய் நகராட்சி கல்வி நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்து, சேதம-டைந்த அங்கன்வாடி மையங்களுக்கு பராமரிப்பு, எலக்ட்ரீஷியன் பணி, டைல்ஸ் அமைப்பது, சுற்-றுச்சுவர், கழிப்பறை சீரமைத்தல், வர்ணம் பூசுதல், மேற்கூரை சீரமைத்தல் போன்ற பல்-வேறு பணிகளை போர்க்கால அடிப்படையில் உடனடியாக செய்யப்படும் என,தெரிவித்தார்.கூட்டத்தில் நகராட்சி பொறியாளர் ரேணுகா, வட்-டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் புனித-வதி, அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.