இன்று பாக்கு ஏலம் நடப்பதாக அறிவிப்பு
நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை-ஆத்துார் பிரதான சாலையில், ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு, ஏற்கனவே மஞ்சள், மக்காச்சோளம், தேங்காய் பருப்பு உள்ளிட்ட வேளாண் விளைபொருட்கள் ஏலம் விடப்பட்டு வருகிறது. கமிஷனின்றி விவசாயிகள் நேரடியாக தங்களது விளை பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். அதேபோல், நாடு முழுவதும் உள்ளூர் வேளாண் பொருட்களை விற்க வசதியாக, 'இ.நாம்' முறையில் ஆன்லைன் டெண்டர் நடத்த வசதியும் உள்ளது.இந்நிலையில், நாமகிரிப்பேட்டையில் முதல் முறையாக ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பாக்கு ஏலம் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த, 19ல், முதன் முதலாக பாக்கு ஏலம் நடந்து முடிந்தது. அதேபோல், இன்று மதியம், 1:00 மணி முதல், 3:00 மணிக்குள் பாக்கு ஏலம் நடக்கும் என, ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் தெரிவித்தனர். விபரங்களுக்கு, 9159356156, 7708808154 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.