மஹேந்ரா பொறியியல் கல்லுாரியில் -பணி நியமன ஆணை வழங்கும் விழா
நாமக்கல் :நாமக்கல், மல்லசமுத்திரம் மஹேந்ரா பொறியியல் கல்லுாரியில் படித்த இறுதியாண்டு மாணவ, மாணவியர், 1,288 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நடந்தது. கல்லுாரி தலைவர் பாரத்குமார் தலைமை வகித்தார்.நிகழ்ச்சியில், சென்னை ஹூண்டாய் நிறுவன முதுநிலை மனித வள மேம்பாட்டு அலுவலர் விக்னேஷ் பேசுகையில், ''இனிவரும் காலங்களில், கற்றல் திறன்களை வளர்த்துக்கொண்டு, சமூகத்தில் ஏற்படக்கூடிய தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்; தங்களால் இயன்ற உதவிகளை, கல்லுாரியில் மற்ற ஆண்டுகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு செய்ய வேண்டும்,'' என்றார்.தொடர்ந்து, மஹேந்ரா கல்லுாரி வளாகத்தில் செயல்பட்டு வரும் விப்ரோ, ஹெக்ஸா வேர், காக்னிசன்ட், டி.வி.எஸ்., ஹரிதா, எல்.என்.டி., போன்ற திறன் மேம்பாட்டு சிறப்பு மையங்கள் மற்றும் பல மென்பொருள் தொழில் நுட்ப நிறுவனங்கள் மூலமாக பணி நியமன ஆணைகளை, மாணவ, மாணவியர் பெற்றுக்கொண்டனர்.மஹேந்ரா பொறியியல் கல்வி குழும செயல் இயக்குனர் சாம்சன் ரவீந்திரன், முதல்வர்கள் சண்முகம், இளங்கோ, செந்தில்குமார், தேர்வு கட்டுப்பாடு அலுவலர் விஸ்வநாதன், புல முதல்வர்கள் நிர்மலா, ராஜவேல், வேலைவாய்ப்பு இயக்குனர் சரவணராஜ், ஒருங்கிணைப்பாளர் பிரபு மணிகண்டன் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.