மேலும் செய்திகள்
வரத்து குறைவால்மஞ்சள் ஏலம் ரத்து
22-Jan-2025
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை பகுதியில், ஆர்.சி.எம்.எஸ்.,சிற்கு சொந்தமான மஞ்சள் மண்டி உள்ளது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்கிழமை மஞ்சள் ஏலம் நடக்கிறது. மஞ்சள் சீசன் முடியும் நிலையில் உள்ளதால், வரத்து குறைந்து வருகிறது.21 நாட்களுக்கு பின், நேற்று நாமகிரிப்பேட்டையில் மஞ்சள் ஏலம் நடந்தது. 410 மூட்டை மஞ்சளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டுவந்தனர். இதில், விரலி ரகம், 100 கிலோ மூட்டை குறைந்தபட்சம், 7,099 ரூபாய், அதிகபட்சம், 12,642 ரூபாய்; உருண்டை ரகம் குறைந்தபட்சம், 6,769 ரூபாய், அதிகபட்சம், 12,002 ரூபாய்; பனங்காலி ரகம், 12,889 ரூபாய்க்கு விற்பனையானது. விரலி, 317, உருண்டை, 92, பனங்காலி, 1 என, 410 மூட்டை மஞ்சள், 26 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
22-Jan-2025