மேலும் செய்திகள்
நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு
24-Jan-2025
நாமக்கல்: நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்து, மகளிர் குழுவுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், கலெக்டர் உமா தலைமையில், மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 2019ன் சிறப்பம்சங்கள் குறித்த விழிப்புணர்வு பயிற்சி கூட்டம் நடந்தது.இதில், கலெக்டர் உமா பேசியதாவது: நாமக்கல் மாவட்டத்திலுள்ள, அனைத்து ஊராட்சிகளிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுமக்களிடையே நுகர்வோர் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும், 100 எண்ணிக்கையிலான மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்க முகாம் நடத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக பயிற்சி முகாம்கள் நடத்த வசதியாக, திட்ட அலுவலர் மகளிர் திட்டம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களை கொண்டு ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இரு தன்னார்வ நுகர்வோர்களுக்கு, நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 2019ன் சிறப்புகள் குறித்த பயிற்சி வழங்கப்பட்டது. தற்போது அவர்கள் மூலம் ஒவ்வொரு ஊராட்சியிலும் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், 100 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு பேசினார்.
24-Jan-2025