உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நவீன வேளாண் தொழில்நுட்பம் கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு

நவீன வேளாண் தொழில்நுட்பம் கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு

குமாரபாளையம்: குமாரபாளையம் உழவர் சந்தையில், கலை நிகழ்ச்சி மூலம் விவ-சாயிகளுக்கு நவீன வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்து விழிப்-புணர்வு ஏற்படுத்தப்பட்டது. வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயமணி தலைமை வகித்தார். துணை வேளாண்மை அலுவலர் மாயஜோதி கலந்துகொண்டார்.இதில், 'அட்மா' திட்டத்தின் கீழ் வழங்கப்படும் விவசாய தொழில்நுட்ப பயிற்சி, கண்டுணர் சுற்றுலா, செயல் விளக்க திடல் அமைத்தல், பண்ணைப்பள்ளி மூலம், விதைத்தது முதல் அறு-வடை வரை நடைபெறும் அனைத்து தொழில்நுட்ப தகவல்கள், வேளாண்மை துறையின் மானிய திட்டங்கள், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், முதல்வரின் மண்-ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம், தமிழ்நாடு சிறுதா-னிய இயக்கம், ஒருங்கிணைந்த பண்ணையம், நுண்ணீர் பாசன திட்டம், பயிர் காப்பீட்டு திட்டம் மற்றும் பிரதம மந்திரியின் கவு-ரவ நிதி திட்டம் ஆகிய திட்டங்கள் குறித்து கலை நிகழ்ச்சிகள் மூலம் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஏற்பாடுகளை, வட்டார தொழில்நுட்ப மேலாளர் கிருபா, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் பிரியங்கா, அருண்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி