உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மின் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு பேரணி

மின் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு பேரணி

பள்ளிப்பாளையம், டிச. 21-பள்ளிப்பாளையம் மின்வாரிய கோட்டம் சார்பில், மின்சார சிக்கனம் மற்றும் பாதுகாப்பு வார விழாவையொட்டி விழிப்புணர்வு பேரணி நடந்தது.ஒட்டமெத்தை மின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் இருந்து, செயற்பொறியாளர் செல்வம் தலைமையில் பேரணி புறப்பட்டு, பள்ளிப்பாளையம் பஸ் ஸ்டாண்ட், கண்டிபுதுார், சந்தைபேட்டை வழியாக ஒட்டமெத்தை பகுதியில் முடிந்தது.பேரணியில் மின் சிக்கனம், பாதுகாப்பு குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பேரணியில் மின்வாரிய பணியாளர்கள், அலுவலர்கள் மற்றும் தனியார் நிறுவன பணியாளர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.* ப.வேலுார் மின்வாரியம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.ப.வேலுார் கோட்ட பொறியாளர் வரதராஜன் பேரணியை துவக்கி வைத்தார். பேரணிக்கு கோட்ட செயற் பொறியாளர் வரதராஜன், உதவி செயற் பொறியாளர் சண்முகசுந்தரம், ராஜா, வினோத் குமார், ஜெகதீஸ்வரன், மகேஸ்வரன் முன்னிலை வகித்தனர்.மின்வாரிய ஊழியர்கள், மின் சிக்கனம் தொடர்பான வாசகங்கள் அடங்கிய பாதகைகளை ஏந்தியபடி பேரணியாக சென்றனர். ப.வேலுார் செயற்பொறியாளர் அலுவலகத்தில் தொடங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக வந்து தொடங்கிய இடத்திலேயே நிறைவடைந்தது. உதவி செய்ய பொறியாளர் அருண்குமார், சக்திவேல் மற்றும் அலுவலர்கள், மின்வாரிய பணியாளர்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை