உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பாரதிய மஸ்துார் சங்கம் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

பாரதிய மஸ்துார் சங்கம் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

பாரதிய மஸ்துார் சங்கம் கோரிக்கை ஆர்ப்பாட்டம்நாமக்கல்:நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன், நேற்று பாரதிய மஸ்துார் சங்கத்தினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட செயலாளர் ரத்தினம் தலைமை வகித்தார். அதில், வருங்கால வைப்புநிதி ஓய்வூதியத்தை குறைந்தபட்சம், 5,000 ரூபாயாக வழங்க வேண்டும். ஊதிய உச்சவரம்பை, 30,000 ரூபாயாக உயர்த்த வேண்டும். தொழிலாளர் மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான ஊதிய உச்சவரம்பை, 42,000 ரூபாயாக உயர்த்தவும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதற்கு எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது.அமைப்புசாரா தொழிலாளர்களின் சமூக பாதுகாப்புக்கு கூடுதல் நிதி ஒதுக்கிடு செய்ய வேண்டும். கடைசி மாத ஊதியத்தில், 50 சதவீத தொகையை ஓய்வூதியமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். மாநில செயலாளர் பிரபு, கட்டுமான சங்க மாநில தலைவர் சவுந்திரராஜன், மாவட்ட பொருளாளர் மோகன்ராஜ், பாரதிய மின் சம்மேளன பொறுப்பாளர்கள், போக்குவரத்து தொழிலாளர் சங்க நிர்வாகிகள், சுமை பணி தொழிலாளர் சங்கத்தினர், அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ