மேலும் செய்திகள்
ஓட்டுச்சாவடி நிலை முகவர்கள் கூட்டம்
03-Nov-2025
பள்ளிப்பாளையம்: பா.ஜ., சார்பில், குமாரபாளையம் சட்டசபை தொகுதி, பி.எல்.ஏ.,-2 பூத் கமிட்டி முகவர்கள் ஆலோசனை கூட்டம், பள்-ளிப்பாளையம் அருகே சந்தைபேட்டை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில், நேற்று முன்தினம் நடந்தது. நாமக்கல் மேற்கு மாவட்ட துணை தலைவரும், குமாரபாளையம் சட்டசபை தொகுதி அமைப்பாளருமான கனகராஜ் தலைமை வகித்தார். மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாம் குறித்து விளக்கி, வாக்குச்சாவடி முகவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.கூட்டத்திற்கு, தொகுதி இணை அமைப்பாளர் அப்புசாமி, பொறுப்பாளர் சத்யாபானு மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் லோகேஸ்வரன், சம்பத், ராகவேந்திரன், வாணி, பிரபு மற்றும் பூத் முகவர்கள் கலந்துகொண்டனர்.
03-Nov-2025