தண்டோரா போட்டு பா.ஜ.,வினர் அழைப்
நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவிக்க 'தண்டோரா' போட்டு பா.ஜ.,வினர் அழைப்புராசிபுரம், டிச. 18-நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவிக்க, கிராமங்களில் தண்டோரா போட்டு மக்களுக்கு பா.ஜ.,வினர் அழைப்பு விடுத்தனர். ராசிபுரம் ஒன்றியத்தில் உள்ள முத்துகள்ளிப்பட்டி, அணைப்பாளையம், குருக்கபுரம், கோனேரிப்பட்டி, கூனவேலம்பட்டிபுதுார் ஆகிய கிராமங்களை, ராசிபுரம் நகராட்சியுடன் இணைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நகராட்சியுடன் இணைப்பதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நகராட்சியுடன் இணைத்தால், 100 நாள் வேலை கிடைக்காது மற்றும் குடிநீர், வீட்டு வரி போன்றவை உயர்வதுடன் பல்வேறு சிரமங்கள் ஏற்படும் என தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில், இன்று உங்களை தேடி உங்கள் ஊரில் நிகழ்ச்சி ராசிபுரத்தில் நடக்கிறது. இதில், கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மனுகொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, பா.ஜ., சார்பில் தண்டோரா போட்டு நேற்று தெரிவித்தனர். அனைவரும் கலெக்டரிடம் மனு கொடுக்க வர வேண்டும் என, வலியுறுத்தி அழைக்கப்பட்டுள்ளனர்.