4ல் பா.ஜ., பொதுக்கூட்டம் 30 ஆட்டோக்களில் பிரசாரம்
நாமக்கல், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், 'தமிழகம் தலைநிமிர, தமிழனின் பயணம்' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். வரும் நவ., 4ல், நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில், மாலை, 5:00 மணிக்கு, நாமக்கல் பூங்கா சாலையில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக, பா.ஜ., இளைஞரணி சார்பில், 30 ஆட்டோக்களில் கட்சிக்கெடியுடன் மாவட்டம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.அதையொட்டி நாமக்கல் மாவட்ட, பா.ஜ., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் ராம்விலாஸ்பிரபு தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட தலைவர் சரவணன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, பிரசார ஆட்டோக்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்.