உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பஸ்களில் சோதனை: ஏர் ஹாரன் பறிமுதல்

பஸ்களில் சோதனை: ஏர் ஹாரன் பறிமுதல்

நாமக்கல்: நாமக்கல்லில் அரசு, தனியார் பஸ்களில் ஆய்வு செய்து, அதிக ஒலி எழுப்பிய ஏர்ஹாரன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.சாலையில் செல்லும் வாகனங்கள், அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன் பயன்படுத்துவதால், பாதசா-ரிகள், இருசக்கர வாகனங்களில் செல்வோர் நிலைதடுமாறி விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. இதனால் அதிக ஒலி எழுப்பும், ஏர் ஹாரன்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி உத்தரவுப்படி, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் முருகேசன், பதுமைநாதன் ஆகியோர் மேற்பார்வையில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சக்திவேல், பிரபாகரன், செந்தில் ஆகியோர், நாமக்கல் நகருக்குள் திடீர் சோத-னையில் ஈடுபட்டனர். அப்போது, விதி மீறிய, 20 பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் வகையில் பொருத்தப்பட்டிருந்த, 'ஏர்-ஹாரன்'களை அதிகாரிகள் கண்டறிந்து பறி-முதல் செய்தனர்.இதேபோல், ப.வேலுார் பஸ் ஸ்டாண்டில், பர-மத்தி மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபாகரன், ப.வேலுார் டிராபிக் இன்ஸ்பெக்டர் ஷாஜகான் ஆகியோர் தலைமையிலான குழுவினர் சோதனை நடத்தினர். இதில், 10 பஸ்களில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஹாரன்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ