உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அரசு கலை கல்லுாரியில் மாணவர் சேர்க்கைக்கு அழைப்பு

அரசு கலை கல்லுாரியில் மாணவர் சேர்க்கைக்கு அழைப்பு

ராசிபுரம், சேந்தமங்கலம், அரசு கலைக்கல்லுாரியில் காலியாக உள்ள இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சேந்தமங்கலம், அரசு கலைக்கல்லுாரி முதல்வர் பாரதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: நடப்பு 2025-26ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை கடந்த, 2ம் தேதி முதல் கலந்தாய்வு மூலம் நடந்து வருகிறது. பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், தேதி வாரியாக அழைக்கப்பட்டு கலந்தாய்வு நடத்தப்பட்டு சேர்க்கை வழங்கப்பட்டுள்ளது. தற்போது தமிழ் துறையில், 33, ஆங்கிலம், 52, வணிகவியல், 24, தாவரவியல், 30 மற்றும் கணினி அறிவியல் துறையில், 15 என மொத்தம், 154 காலியிடம் உள்ளது.இக்கல்லுாரியில் விண்ணப்பித்து, இதுவரை சேர்க்கை கிடைக்காத மாணவ, மாணவியர் தேவையான அனைத்து சான்றுகளுடன், கல்லுாரிக்கு நேரில் வந்து மதிப்பெண் அடிப்படையில் சேரலாம். மேலும் தகவல் பெற, 9865428419, 9443340934 , 9677844519 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ