உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / இன்று மெகா கல்வி கடன் மேளா கல்லுாரி மாணவர்களுக்கு அழைப்பு

இன்று மெகா கல்வி கடன் மேளா கல்லுாரி மாணவர்களுக்கு அழைப்பு

நாமக்கல்: 'எர்ணாபுரம் சி.எம்.எஸ்., பாலிடெக்னிக் கல்லுாரியில் இன்று நடக்கும் கல்வி கடன் மேளாவில், கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்று பயன்பெறலாம்' என, எம்.பி., ராஜேஸ்குமார் தெரிவித்-துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:கல்லுாரி மாணவ, -மாணவியர் கல்வி பயில்வதற்கு ஏதுவாக, நாமக்கல் மாவட்டம், எர்ணாபுரம் சி.எம்.எஸ்., பாலிடெக்னிக் கல்-லுாரியில், இன்று காலை, 10:00 மணிக்கு, 'மெகா கல்வி கடன் மேளா' நடக்கிறது. கலெக்டர் உமா தலைமை வகிக்கிறார். இக்-கல்விக்கடன் மேளாவில், கல்விக் கடனுக்கு விண்ணப்பித்த, 300-க்கும் மேற்பட்ட மாணவ, -மாணவியருக்கு, கல்விக் கடன் ஆணை வழங்கப்படுகிறது.மேலும், புதிதாக கல்வி கடன் பெற விண்ணப்பிப்பதற்காக இம்-முகாமில், தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் பொதுத்துறை, தனியார் துறை வங்கிகள் பங்கேற்கின்றன. இவர்கள், தன்னார்வ-லர்கள் மூலம், மாணவர்கள் எளிதாக கல்விக் கடன் பெறுவதற்கு ஏதுவாக, புதிதாக வங்கி கணக்கு தொடங்குதல், புதிய பான் கார்டு விண்ணப்பித்து, மாணவ, -மாணவியருக்கு கல்வி கடன் விரைவில் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.இந்த கல்வி கடன் மேளாவில், மாணவ, -மாணவியர், பெற்றோர் மற்றும் கல்வி கடன் பெறுபவர்கள் பங்கேற்று பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ