உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மரவள்ளி முத்தரப்பு கூட்டம்

மரவள்ளி முத்தரப்பு கூட்டம்

நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மரவள்ளி கிழங்கு விவசாயிகள், ஆலை உரிமையாளர்கள், மாவட்ட நிர்வாகம் அடங்கிய முத்தரப்பு கூட்டம், நேற்று நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார் முன்னிலை வகித்து பேசியதாவது: தமிழகத்தில், ஜவ்வரிசி பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். முதற்கட்டமாக, முதல்வரின் காலை உணவு திட்டத்தில் ஜவ்வரிசி பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மரவள்ளி கிழங்கிற்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்யவும், கூட்டுறவு முறையில் ஜவ்வரிசி ஆலையை தொடங்கவும், மரவள்ளியிலிருந்து எத்தனால் உற்பத்தி செய்ய அரசுக்கு முன்மொழிவு அனுப்பி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நவீன முறையில் ஸ்டார்ச் அளவை கண்டறியும் டிஜிட்டல் மீட்டர் தொழில் நுட்பம், ஆராய்ச்சி நிலைய ஒப்புதலுடன் ஆலைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சேகோ ஆலை நிறுவனங்கள் மூலம் மரவள்ளி மூலப்பொருள்களிலிருந்து எரிபொருள் தயாரிக்க முயற்சி மேற்கொள்ளப்படும். மத்திய கிழங்கு ஆராய்ச்சி நிலையத்தின் துணை நிலையம், நாமக்கல் மாவட்டத்தில் நிறுவுவதற்கு வழிவகை செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார். சேகோ சர்வ் மேலாண் இயக்குனர் கீர்த்தி பிரியதர்ஷினி, கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் அருளரசு, வேளாண் இணை இயக்குனர் கலைச்செல்வி, விவசாயிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை