உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கைலாசநாதர் கோவிலில் தேர் திருவிழா கோலாகலம்்

கைலாசநாதர் கோவிலில் தேர் திருவிழா கோலாகலம்்

ராசிபுரம், ராசிபுரத்தில், வரலாற்று சிறப்பு மிக்க அறம் வளர்த்த நாயகி உடனமர் கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை தேர் திருவிழா நடப்பது வழக்கம். இந்தாண்டு சித்திரை தேர் திருவிழா, கடந்த, 1ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. நேற்று காலை, சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளினார். மாலை, 4:30 மணியளவில் திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. எம்.பி., ராஜேஸ்குமார், சேர்மன் கவிதா உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கைலாய வாத்தியம் முழங்க தேரில் கைலாசநாதர் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேர் திருவிழாவையொட்டி, நேற்று மாலை அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை