உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / செல்லாண்டியம்மன் கோவில் தேர்த்திருவிழா

செல்லாண்டியம்மன் கோவில் தேர்த்திருவிழா

மோகனுார் : மோகனுார் அடுத்த எஸ்.வாழவந்தியில், பிரசித்தி பெற்ற செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு விழா, கடந்த, 2ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, சுவாமிக்கு தினமும் பல்வேறு அபிஷேகம், ஆராதனை நடந்தது. நேற்று மதியம், 2:00 மணிக்கு, சுவாமி தேரில் ரதம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது.இதையடுத்து, எஸ்.வாழவந்தி பகுதியில் மாவிளக்கு பூஜையும், எல்லை உடைத்தல் நிகழ்ச்சியும் நடந்தது. உயிருடன் உள்ள செம்மறி ஆட்டின் ஈரல் எடுத்து சுவாமி மடியில் வைத்து பூஜை செய்து பூசாரி வாயில் வைத்து ஊமை புலி குத்தும் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது.இதையடுத்து, சின்னகரசபாளையம், பெரியகரசப்பாளையம், கே.ராசாம்பாளையம், காளிபாளையம், பெரமாண்டம்பாளையம், முத்துார், ஆண்டிபாளையம், வடக்கு தீர்த்தாம்பாளையம், மோளக்கவுண்டனுார், குட்லாம்பாறை, கே.அய்யம்பாளையம், நொச்சிப்பட்டி, கே.புதுப்பாளையம் அக்கரையாம்பாளையம், புளியம்பட்டி, வள்ளியப்பம்பட்டி, வள்ளியப்பம்பட்டிபுதுார் என, 18 ஊர்களிலும், தினமும் இரவு, 7:00 மணிக்கு, மாவிளக்கு பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை, ஹிந்து சமய அறநிலையத்துறையினர், கோவில் நிர்வாகிகள், ஊர்மக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ