மேலும் செய்திகள்
மகாவீர் ஜெயந்தி: நுாதனமாக இறைச்சி விற்பனை
11-Apr-2025
ப.வேலுார்: ப.வேலுார் பகுதிகளில், 30க்கும் மேற்பட்ட கறிக்கோழி கடைகள் உள்ளன. இங்கு பிராய்லர் கோழிகள் உயிருடன் மற்றும் இறைச்சியாக விற்பனை செய்யப்படுகிறது. நேற்று, ஞாயிற்றுக்கிழமை என்பதால் பெரும்பாலான வீடுகளில் அசைவத்தை விரும்பி சமைப்பர். நேற்று, வழக்கம்போல் ப.வேலுார் பகுதி கறிக்கோழி கடைகளில் கூட்டம் அலைமோதியது.நேற்று முன்தினம், கறிக்கோழி உயிருடன், 160 ரூபாய்க்கும், ஒரு கிலோ கறி, 200 ரூபாய்க்கும் விற்பனையானது. ப.வேலுார் பகுதிகளில் கறிக்கோழி கடை வியாபாரிகள் போட்டியால் விலை குறைத்து விற்பனை செய்தனர். நேற்று, கறிக்கோழி உயிருடன், 120 ரூபாய்க்கும், கறி ஒரு கிலோ, 140 ரூபாய்க்கும் விற்பனை செய்தனர். பிராய்லர் கோழி விலை குறைப்பால், கறி வாங்க வந்திருந்த வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதனால் கறிக்கடைகளில் கூட்டம் அலைமோதியது.
11-Apr-2025