உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / டெங்குவை ஒழிக்க ஒருங்கிணைந்து பணியாற்ற கலெக்டர் அழைப்பு

டெங்குவை ஒழிக்க ஒருங்கிணைந்து பணியாற்ற கலெக்டர் அழைப்பு

நாமக்கல்: நாமக்கல் ஊராட்சி ஒன்றியம், சிலுவம்பட்டி ஊராட்சி, பொரச பாளையம் கிராமத்தில் நேற்று கலெக்டர் உமா டெங்கு ஒழிப்புப்பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.தண்ணீர் தேங்கும் பகுதிகள், வீடுகளில் சேமிக்கப்படும் தண்ணீர் மற்றும் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு, ஊராட்சிகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டவரும் துாய்மை பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் அனைத்து பகுதிகளிலும் கொசு மருந்து, கிருமி நாசினி தெளிக்கவும், நாமக்கல் மாவட்டத்தில் டெங்கு இல்லை என்ற நிலையை உருவாக்க அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.வீடுகளில் ஆய்வு செய்தபோது, பொதுமக்கள் தங்கள் வீடுகளை சுற்றியுள்ள பகுதிகளில், மழை நீர் தேங்கும் வகையில் உள்ள தேங்காய் சிரட்டை, அம்மிக்கல், துாக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் கப்புகள், டயர்கள் போன்றவை இருப்பின் அவற்றில் மழை நீர் தேங்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளவும், பொதுமக்கள் பயன்படுத்தும் குளிர்சாதன பெட்டியின் பின்புறம் தண்ணீர் தேங்குவதை கண்காணித்து துாய்மைப்படுத்த வேண்டும் என, அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை