| ADDED : ஜூலை 27, 2024 12:47 AM
புதுச்சத்திரம்: கர்நாடகா மாநிலத்தில் ஏற்பட்ட காற்றாற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த லாரி டிரைவர்களின் குடும்பத்தினருக்கு, நேற்று கலெக்டர் ஆறுதல் கூறினார்.புதுச்சத்திரம் யூனியன், தாத்தையங்கார்பட்டியை சேந்தவர் சின்-னண்ணன், 56; டேங்கர் லாரி டிரைவர். இவர் கடந்த இரண்டு வாரத்திற்கு முன், கர்நாடகா மாநிலத்திற்கு, டேங்கர் லாரியை ஓட்டிச்சென்றார். அப்போது அங்கு ஏற்பட்ட காற்றாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார். அவரது உடல், நாமக்கல் கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்-பட்டது. இதேபோல், செல்லப்பம்பட்டியை சேர்ந்த சரவணன், காற்றாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உடலை தேடி வந்தனர். இந்நிலையில், அவரின் பாதி உடல் கிடைத்த நிலையில், டி.என்.ஏ., பரிசோதனை மூலம் சரவணன் என, நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டது.இறந்த இரண்டு லாரி டிரைவர்களின் வீட்டிற்கு சென்ற கலெக்டர் உமா, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.