உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 100 சதவீதம் தேர்ச்சி ஹெச்.எம்.,க்கு பாராட்டு

100 சதவீதம் தேர்ச்சி ஹெச்.எம்.,க்கு பாராட்டு

நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 700க்கும் மேற்பட்ட மாணவியர் படித்து வருகின்றனர். கடந்த, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் இப்பள்ளியில் படித்த அனைத்து மாணவிகளும், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதை பாராட்டி பள்ளிக்கல்வித்துறை சார்பில் தலைமை ஆசிரியர் சத்தியவதிக்கு, பாராட்டு சான்றிதழ் வழங்கினர். இந்நிலையில், நேற்று பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் அரிமா சங்கம், பள்ளி மேலாண்மை குழு சார்பில் ஆசிரியர், ஆசிரியைகளுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். மேலும், அனைத்து ஆசிரியர்களுக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அன்பழகன், செந்தில், கிருஷ்ணன், மேலாண்மை குழு சசிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ